வாரனாசியைச் சேர்ந்த இந்த டாக்ஸி டிரைவர் வித்தியாசமானவர். டாக்ஸி ஸ்டாண்டில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டு, பீடி கடித்துக் கொண்டிருக்காமல், வெளிநாட்டு டூரிஸ்டுகளுக்கு youtube மூலமாக தனது சேவைகளை விவரித்து விடியோவில் பேசுகிறார். Youtube உங்கள் மொபைலில் தெரியும் -GPRS அல்லது 3G இருந்தால். வாரனாசிக்கு வரும் வெளிநாட்டுப் பயணிக்கு youtube பார்ப்பது மிக எளிதாக இருக்கும் - யாரையும் கேட்பதை விட.
தொழில்நுட்பத்தின் உச்சம் என்பது அதன் பயன்பாட்டின் அதி எளிமை தான்.
ஒரு டாக்ஸி டிரைவரால் இதைச் செய்ய முடியும் எனில், நம்முடைய தொழிலில்
நம்மால் என்னென்ன செய்ய முடியும் அல்லது செய்ய வேண்டும் என்பதை ரூம் போடாமல் உட்கார்ந்த இடத்தில் யோசித்தால் கூட ஒரு 5 யோசனையாவது தோன்றும். முடிந்தால் செய்யுங்கள். இல்லையென்றால், யோசிக்காமல் என்னைக் கூப்பிடுங்கள். வந்து யோசிக்கச் சொல்லித் தருகிறேன்.
3 comments:
good
பகிர்விற்கு நன்றி.
வாழ்த்துகள்.
Very Interesting and motivating post!
Thanks 4 sharing...
கருத்துரையிடுக