ீஇது விழா பற்றிய பதிவு அல்ல. அரஙகிற்கு வெளியே ஒலித்தகடு விற்குமிடத்தில் நின்று கொண்டிருந்தேன் . வைகோு,தமிழருவிமணியன், கண்ணதாசன் என்று பலருடைய ஒலித்தகடுகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. இது விற்பவருக்கும் வாங்கும் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல்:
"சார், தமிழருவி மணியன் வாங்கிக்கிங்க"
'வேண்டாங்க, அவருது ஒரு தடவைக்கு மேல கேக்க முடியாது'
'இதப் பாருங்க, வைரமுத்துது. மூணு மண்ணேரம் பேசுவார்'
'மூணு மண்ணேரமா!'
'ஆமாங்க, கலாமோட அக்னி சிறகுகள் பத்தி பேசுனது'
'அந்த புக்கையே அப்பிடியே படிச்சிட்டாரா?'
'இல்லீங்க, அந்த புக்கில இருக்கிற மேட்டர் தான்'
'கலாம் பேசுனது இல்லியா?'
'இந்த மேட்டர அவர் பேசுறத விட இவுர் பேசறது தான் நல்லா இருக்கும்.இவரு நல்லா ஏத்தி எறக்கி பேசுவாரு."