கடந்த 20 வருடங்களில் நம்மைச் சுற்றி எவ்வளவோ மாற்றங்கள். அவை எல்லாம் இந்த நூற்றாண்டில் நம்மை, நம் வாழ்முறையை மாற்றியிருக்கின்றன. கீழ்க்கண்டவை உங்களுக்குப் பொருந்துமா? இவற்றில் 6க்கு மேல் உங்களுக்குப் பொருந்தும் எனில் நீங்கள் இந்த நூற்றாண்டில் வாழத் தகுந்தவர். இல்லையேல் நீங்கள் ஒரு மன நல மருத்துவரைப் பார்ப்பது உங்கள் கூட வாழ்பவருக்கு நல்லது.

எந்த சூழலையும் சாதகமாகப் பயன் படுத்த முடியும், நம் சிந்தனையில் புதுமை இருந்தால். அமெரிக்காவில் உள்ள Tees and tats என்ற T-சர்ட் விற்கும் நிறுவனம், T-சர்டின் விலையை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணைக் கொண்டு நிர்ணயிக்கிறார்கள். உதாரணத்திற்கு, சென்செக்ஸ் 10000 பாய்ண்டாக இருக்கும் பொழுது நீங்கள் Rs.500 கொடுத்து வாங்கும் சட்டைக்கு, அடுத்த 60 நாட்களுக்குள் ஒவ்வொரு 1000 பாய்ண்ட் குறைவிற்கும் Rs.50/= ஐ திருப்பிக் கொடுக்கிறார்கள். ( அதிக பட்சமாக - 7 முறை).
எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பார்த்தீர்களா?
இந்த பதிவிற்கு முதலில் 'வித்தியாசமான பார்வை' என்று தான் தலைப்பு கொடுக்க நினைத்தேன். தமிழில் மிகவும் பயன்படுத்தப்பட்டு நீர்த்துப் போன (பன்முறை **பழிக்கப்பட்ட) சொல் இந்த 'வித்தியாசமான' என்பதால் மாற்றி
வாரனாசியைச் சேர்ந்த இந்த டாக்ஸி டிரைவர் வித்தியாசமானவர். டாக்ஸி ஸ்டாண்டில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டு, பீடி கடித்துக் கொண்டிருக்காமல், வெளிநாட்டு டூரிஸ்டுகளுக்கு youtube மூலமாக தனது சேவைகளை விவரித்து விடியோவில் பேசுகிறார். Youtube உங்கள் மொபைலில் தெரியும் -GPRS அல்லது 3G இருந்தால். வாரனாசிக்கு வரும் வெளிநாட்டுப் பயணிக்கு youtube பார்ப்பது மிக எளிதாக இருக்கும் - யாரையும் கேட்பதை விட.