கடந்த 20 வருடங்களில் நம்மைச் சுற்றி எவ்வளவோ மாற்றங்கள். அவை எல்லாம் இந்த நூற்றாண்டில் நம்மை, நம் வாழ்முறையை மாற்றியிருக்கின்றன. கீழ்க்கண்டவை உங்களுக்குப் பொருந்துமா?
- உங்களிடம் இரண்டு செல்ஃபோன்கள் இருக்கும். ஒன்றின் எண் மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும்.
- உங்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ஈ-மெயில் முகவரிகள். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை மெயில் வந்திருக்கிறதா எனப் பார்ப்பீர்கள். நடு இரவில் விழித்தால் ஒருமுறை.
- காலையில் எழுந்ததும் முதலில் தேடுவது உங்கள் கணவரையோ / மனைவியையோ அல்ல. உங்கள் செல்ஃபோனை.
- உங்கள் வீட்டு Land Line எண்ணை உங்களால் உடனே சொல்ல முடியாது.
- உங்கள் மகளை வேவு பார்க்க அவளுக்குத் தெரியாமல் அவளது செல்ஃபோனின் Call Duration களைப் பார்ப்பீர்கள்.
- உங்கள் மகனை வேவு பார்க்க அவனுடன் Face Book-லோ, orkut-லோ மாறுவேடத்தில் நண்பனாகி கண்காணிப்பீர்கள்.
- வீட்டில் நுழைந்த 5 நிமிடத்திற்குள் TV யின் ரிமோட் கிடைக்காவிட்டால் கொலைவெறி ஏற்படும்.
- 65 சேனல் எல்லாம் உங்களுக்குப் பத்தாது. 0-லிருந்து 65 வரை மூன்று முறையாவது சுற்றி, 'ஒரு ப்ரொக்ராம் கூட சரியில்ல' என்று திட்டி விட்டுத் தான் தூங்குவீர்கள்.
- 14+53+62-ன் விடையை கால்குலேட்டர் இல்லாமல் உங்களால் சொல்ல முடியாது.
- உங்கள் வீட்டருகில் தபால் அலுவலகம் எங்கு இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது.
இவற்றில் 6க்கு மேல் உங்களுக்குப் பொருந்தும் எனில் நீங்கள் இந்த நூற்றாண்டில் வாழத் தகுந்தவர். இல்லையேல் நீங்கள் ஒரு மன நல மருத்துவரைப் பார்ப்பது உங்கள் கூட வாழ்பவருக்கு நல்லது.
0 comments:
கருத்துரையிடுக