இந்த பதிவிற்கு முதலில் 'வித்தியாசமான பார்வை' என்று தான் தலைப்பு கொடுக்க நினைத்தேன். தமிழில் மிகவும் பயன்படுத்தப்பட்டு நீர்த்துப் போன (பன்முறை **பழிக்கப்பட்ட) சொல் இந்த 'வித்தியாசமான' என்பதால் மாற்றி
விட்டேன். சரி, விஷயத்திற்கு வருவோம்.
என்னுடைய பயிற்சி வகுப்புகளில் மாறுபட்ட சிந்தனையைத் தூண்ட தமிழ் "படமொழி" யைப் பயன்படுத்துவேன். உதாரணமாக இந்த படத்தைப் பாருங்கள்.
இதன் விடை : பச்சைத் தண்ணீர். - (பச்சை நிறத்தில் எழுதப்பட்ட தண்ணீர் என்ற வார்த்தை). புரிகிறது என்று நினைக்கிறேன். எழுதிய முறையிலோ, நிறத்தாலோ, அல்லது எழுதப்பட்ட இடத்தாலோ - அது எதை குறிக்கிறது என்று கண்டுபிடிப்பது. சுஜாதா கூட ஒரு முறை இதைப் பற்றி எழுதியிருக்கிறார்.
இப்போது இந்த இரண்டு படங்கள் சொல்வது எதைப் பற்றி?
0 comments:
கருத்துரையிடுக